ஜனாதிபதி - தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் சந்திப்பை தடுத்தது யார்..!
வரவு - செலவு திட்டத்தி்ற்கு முன்பு முழுமையான சந்திப்பு ஒன்று இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காட்ப்பட்டது உண்மை. ஆனால் அது கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்ற கருத்து காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தடவை 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதை கூட கண்டு கொள்ளாத இப்படிப்பட்டவர்கள் நாங்கள் 8பேரும் வெளிநடப்பு செய்ததன் விளைவு சாதகமாக இருக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை.
இந்நநிலையில், வடக்கு மாகாணத்தில் ஒரு போராட்டம் நடக்கும் போது அங்கு ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் செல்கின்றார்கள்.
ஆனால் கிழக்குப் பகுதியில் மக்கள் குறை நிறைகளை கேட்பதற்கு ஆளும் கட்சியினர் இவ்வாறு செல்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....