ஜனாதிபதி நிதியத்தில் ஏற்பட்டுள்ள சாதக மாற்றம் - பலருக்கு கிடைக்கவுள்ள நன்மைகள்
சமகால அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி நிதியத்தின் நிதி 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது உரையாற்றிய பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இணையவழி முறைமையின் ஊடாக சேவைகள் பரவலாக்கப்பட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி நிதியத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டு 1,664 ஆக இருந்தது.
விரிவுபடுத்தப்பட்ட நன்மைகள்
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு 27,948 ஆக அதிகரித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் 100 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதித் திட்டம் விரிவுபடுத்தப்பட்ட நன்மைகள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் கூறினார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுமார் 2,000 மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவுக்கு அருகில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கைக்கு முக்கிய அறிவுறுத்தல்