தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு! சாணக்கியன் முன்வைத்த கோரிக்கை
கட்சியின் தீர்மானமே எமக்கு முக்கியம் இதனை வைத்துக் கொண்டு சிலர் அரசியற் குழப்பங்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(5) இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்டக் கிளை, தொகுதிக் கிளை, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உபதலைவர்கள், வாலிபர் முன்னணி போன்றவற்றின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
இவ்வருடத்திற்கான செயற்பாடுகள், கட்சியினை வளப்படுத்தல், உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம்.
அத்துடன் எதிர்வரும் காலங்களின் மக்கள் முகம்கொடுக்கும் பல பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கி எவ்வாறு நகர்வது என்பது குறித்து இன்றை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
அதேநேரத்தில் நேற்றைய அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் அமரர் சீ.மூ.இராசமாணிக்கத்தின் ஜனன தினத்தினைச் சிறப்பாக மேற்கொள்வது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri