ஜனாதிபதி தேர்தல் குறித்த காலத்தில் நடாத்தப்பட வேண்டும் : வியாழேந்திரன்
எத்தனை பேர் வழக்கு தாக்கல் செய்தாலும் குறித்த திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடாத்தியே ஆக வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் (S. Viyalendiran) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்கக்கோரி இன்று (12) மேல்நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவர் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் ஐந்து வருடத்திற்குள் நடத்தப்பட வேண்டும். எனினும், ஜனாதிபதி இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளதாக நான் இதுவரை அறியவில்லை.
இந்நிலையில், பொதுஜன பெரமுன தமது கட்சி சார்ந்து இதுவரை ஜனாதிபதி வேட்பாளரையும் நிறுத்தவில்லை. குறித்த கட்சி சார்ந்தவர்களது கருத்துக்களை அண்மைக்காலமாக அவதானித்து வருகின்றேன்.
அதாவது அவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தருவது தொடர்பான கருத்துக்களைத்தான் கூறிவருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |