யாழில் உண்ணிக்காய்ச்சலால் மூதாட்டி மரணம்
யாழ்ப்பாணத்தில் உண்ணிக்காய்ச்சல் காரணமாக மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று நாட்களின் பின்னர் இன்று மரணித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கொட்டடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பெனடிக் ரொசாரி (வயது - 63) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி காலை உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
எனினும், சிகிச்சை பயனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு உண்ணி காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை
அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 8 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam