அரசாங்கத்திற்குள் இருப்பவர்களே அரசின் செயற்பாடுகளை சீர்குலைக்கின்றனர்! ரொஷான் ரணசிங்க
அரசாங்கம் முன்னெடுத்து வரும் மக்கள் சார்பான ஆட்சியை சீர்குலைக்கும் சூழ்ச்சியாளர்கள் அரசாங்கத்திற்குள்ளேயே இருப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார்.
இவர்கள் அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தையே விமர்சித்து வருகின்றனர் எனவும் இது எந்த வகையிலும் பொருத்தமற்ற செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்திற்கு அமைய செயற்பட்டு வருகிறது. அதனை சீர்குலைக்க அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எவராலும் முடியாது.
சில அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள். அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களை வெளியில் வந்து விமர்சிக்கின்றனர்.
இப்படியான நபர்கள் குறித்து மிக துரிதமாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். தொடர்ந்தும் இந்த சூழ்ச்சியாளர்கள் அரசாங்கத்திற்குள் இருந்தால், அது அரசாங்கத்தின் பயணத்திற்கு தடையாக இருக்கும் எனவும் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri