“இலங்கையர்களுக்கு சோறு வழங்கும் தந்தையாக மாறிய சீன ஜனாதிபதி”
திருடி சாப்பிடுவது, கடனுக்கு சாப்பிடுவது மற்றும் விற்று சாப்பிடுவதே அரசாங்கத்தின் கொள்கை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (wijitha herath)நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனது இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளிடம் இருந்து கடனை பெறவில்லை என ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் குறிப்பிட்டார்.
எனினும் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியிலேயே அதிகளவில் கடன் பெறப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கடன் 21 ட்ரில்லியன் ரூபாய். இதில் 8 ட்ரில்லியன் ரூபாய் கடன் கோட்டாபயவின் ஆட்சிக்காலத்திலேயே பெறப்பட்டுள்ளது.
தற்போது சோறு வழங்கிய தந்தையாக சீனாவின் ஜனாதிபதி ஷீ ஜின்னை மக்கள் கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri