மக்கள் அநாவசிய பயணங்களை தவிர்த்து கொள்வது சாலச்சிறந்தது:திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்
திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணி மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டி கோராளவின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
மாவட்டத்தில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளத்தேவையான நடவடிக்கைகள்பற்றி இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாகச் சுகாதார நடைமுறைகளைப்பேணி செயற்பாடுகளை மேற்கொள்வதன் அவசியம் பற்றி இதன்போது அரசாங்க அதிபரால் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்கள் பி.சி.ஆர் மற்றும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் குறித்த பகுதிகளைச் சில நாட்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பது தொடர்பில் அவதானம் செலுத்த முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர் .
மாவட்டத்தில் பல இடங்களில் எழுமாறான பி.சி.ஆர் மற்றும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவதானத்தைக் கருத்திற்கொண்டு தமது செயற்பாடுகளைச் சுகாதார நடைமுறைகளை முற்றாகப் பேணி செயற்படல் மூலம் கொவிட்டிலிருந்து பாதுகாப்பு பெற முடியுமென்றும் அநாவசிய பயணங்களில் தவிர்த்ந்து கொள்வது சாலச்சிறந்தது என்றும் இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.