நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள மிகவும் முக்கிய அறிவித்தல்
மக்கள் கூடியுள்ள இடங்களில் தண்ணீர் அருந்தக் கூட முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெல்டா திரிபு மிக வேகமாக பரவுவதனால், வீட்டிலிருந்து வெளியேறுபவர்கள், மக்கள் கூடி இருந்தால், அந்த இடத்தில் தேநீர் அருந்தவோ அல்லது தண்ணீர் அருந்தவோ முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் என சுகாதார இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளார்.
இதுவரையில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எந்த வகையான தடுப்பூசி என்று பார்த்துக்கொண்டிருக்காமல், அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் மையத்திற்கு சென்று, ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
கட்டான பகுதியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan