இஸ்ரேலின் அதிரடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி
இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மிக நீண்ட காலமாக மோதல் நிலவி வருகின்றது.
இதற்கமைய பாலஸ்தீனர்களிடம் இருந்த காசா மலைக்குன்று அடங்கிய பகுதியை, 2007ல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது.
இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ்
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 6ஆம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது, 20 நிமிடங்களில், 5,000 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்படி, நேற்றுவரை நடந்த தாக்குதலில் 900 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் ஹமாஸ் தரப்பிலும் பலர் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேல் வான் தாக்குதல்
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இன்றும் இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் ஜாவத் அபு ஷாமாலா உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மரணத்தை இஸ்ரேல் இராணுவ அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இதற்கமைய கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அமைச்சர், அந்த அமைப்பின் அரசியல் ஆலோசகராகவும், நிதி திரட்டுபவராகவும் இருந்துள்ளார்.
மேலும், அவரது மரணம் ஹமாஸ் அமைப்புக்கு பின்னடைவாக இருக்கலாம் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
you may like this