மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்! மற்றுமொரு பெருந்தொகை வருமானத்தை இழக்கும் இலங்கை
மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான இலங்கை இளநீர் (Coconut water) ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
துபாய் வர்த்தக மையம் வழியாக வாரத்திற்கு சுமார் 320,000 இளநீர் (Coconut water) இலங்கையிலிருந்து சவுதி அரேபியா மற்றும் ஓமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இலங்கை இளநீர்களுக்கு தேவை அதிகரிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை இளநீர்களுக்கு (Coconut water) அதிக தேவை இருந்துள்ளது.
இந்நிலையில், போர் சூழ்நிலை காரணமாக கப்பல் போக்குவரத்து தடைபட்டதால் நாட்டிற்கான இளநீர் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

இளநீர் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால், இளநீர் ஏற்றுமதியாளர்கள் உட்பட ஏராளமான மக்கள் தங்கள் வருமானங்களை இழந்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால், தற்போது, உள்ளூர் சந்தையில் ஒரு சிறிய இளநீர் ரூ.180 முதல் 200 வரையிலும், ஒரு பெரிய இளநீர் ரூ.250க்கும் விற்கப்படுகின்றது.