உலங்கு வானூர்தி விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி! மறுப்பு வெளியிட்டுள்ள இஸ்ரேல்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததற்கும் இஸ்ரேலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இஸ்ரேலின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியதாக ஜெருசலேம் செய்திச் சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் மரணத்தில் இஸ்ரேலின் மொசாட் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்தாக குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக இஸ்ரேலின் மொசாட் அமைப்புதான் இந்த விபத்திற்கு காரணம் என இஸ்ரேலை வெறுப்பவர்கள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பதிவு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிலர் ஈரான் ஜனாதிபதி பயணித்த அந்த உலங்கு வானூர்தியை ஓட்டிச்சென்றவர் மொசாட் அமைப்பை சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் இவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
