உச்சமடையும் பதற்றம்! ஈரானில் மக்களுக்கு பாதுகாப்பு படைகள் வழங்கியுள்ள அவசர எச்சரிக்கை
ஈரானில் உள்ள மக்கள் இன்று தொடருந்தில் பயணிக்க வேண்டாம் என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பான பதிவொன்றில் ஈரானில் உள்ள மக்கள் "உங்கள் பாதுகாப்பிற்காக" நாடு முழுவதும் "ஈரான் நேரப்படி இரவு 9 மணி வரை" தொடருந்தை பயன்படுத்துவதையும் அதில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்று பாதுகாப்பு படைகள் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் தொடருந்துகளிலும் தொடருந்து பாதைகளுக்கு அருகிலும் இருப்பது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டிரம்பின் எச்சரிக்கை
செவ்வாய்க்கிழமை கிழக்கு நேரப்படி இரவு 8 மணிக்குள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற போக்குவரத்தை ஈரான் அனுமதிக்க மறுத்தால், ஈரான் முழுவதும் உள்ள பொதுமக்கள் உள்கட்டமைப்பு இலக்குகளைத் தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

இவ்வாறான சூழலில் மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை உச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.