ஐ.நா வாகனத்தை இலக்கு வைத்த இஸ்ரேலிய படைகள்
ராஃபா மீதான இஸ்ரேலின் படையெடுப்பில் மனிதாபிமான உதவியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்(Antonio Guterres) அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தள இடுகையில் இதனை கூறியுள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
Today a @UN vehicle was struck in Gaza, killing one of our colleagues & injuring another.
— António Guterres (@antonioguterres) May 13, 2024
More than 190 UN staff have been killed in Gaza.
Humanitarian workers must be protected.
I condemn all attacks on UN personnel and reiterate my urgent appeal for an immediate humanitarian…
ஐ.நா. பணியாளர்கள் மீதான தாக்குதல்
"ஐ.நா. பணியாளர்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் நான் கண்டிக்கிறேன். உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் அனைத்து பணயக்கைதிகளை விடுவிக்கவும் எனது அவசர வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறேன்," என கூறியுள்ளார்.
தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் ஐ.நா என தெளிவாகக் குறிக்கப்பட்ட வாகனத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அன்டோனியோ குட்டெரெஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |