இஸ்ரேல் தூதரகத்தை அச்சத்திற்கு உட்படுத்திய சத்தம்: டெல்லியில் பரபரப்பு
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகில் அதிபயங்கர சத்தம் கேட்டதாக டெல்லி பொலிஸாருக்கு தொலைபேசியில் கிடைத்த தகவலை வைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தூதரகம் அமைந்துள்ள பகுதிகளில் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குறித்த பகுதியில் இருந்து பாரிய சத்தம் வந்ததற்கான ஆதாரம் எதுவும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் தூதரக செய்தி
மேலும், நேற்று(26) மாலை 5 மணி அளவில் தூதரகம் அருகில் குண்டு வெடிப்புக்கு இணையான அளவிற்கு அதிபயங்கரமான சத்தம் கேட்டதாக இஸ்ரேல் தூதரக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் தூதரக ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
