ரஃபாவில் 50 சதவிகித ஹமாஸ் அமைப்பினரை வீழ்த்திய இஸ்ரேல்
காசா முனையின் ரஃபாவில் 50 சதவிகித ஹமாஸ் அமைப்பினரை வீழ்த்திவிட்டதாக இஸ்ரேல்(Israel) இராணுவம் தெரிவித்துள்ளது.
ரஃபா நகரில் ஹமாஸ் அமைப்பினர் 4 பிரிவுகளாக செயல்பட்டுவருவதாகவும், இதில் 2 பிரிவுகள் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
மேலும், எஞ்சிய 2 ஹமாஸ் பிரிவுகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ரஃபாவில் பணியை முடிக்க இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம் என்றும் இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
அடிப்படை ஒப்பந்தம்
இந்நிலையில், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
குறித்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு, இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.
காசா முனையின் நஸ்ரத் அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 4 பணய கைதிகளையும் அண்மையில் இஸ்ரேல் அதிரடியாக மீட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |