இஸ்ரேல் தூதரின் செயற்பாட்டால் அதிர்ச்சியடைந்த ஐ.நா சபை
பாலஸ்தீனத்திற்கு(Palestine) ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல்(Israel) தூதர் ஐ.நா.வின் அறிக்கையை கிழித்த காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் ஐ. நா பார்வையாளராக செயற்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராக்குவதற்கான ஐ. நா தீர்மானமொன்றை கொண்டுவந்துள்ளது.
UN General Assembly.
— ??Ireland4Palestine?? (@HensonJames11) May 10, 2024
The Palestinian ambassador left the stage to thunderous applause. His Israeli counterpart fittingly left to deathly silence.
He even brought a portable shredder, callimg it a mirror. The Israeli ambassador is comedy gold. ??? pic.twitter.com/inhDvGPp24
பாலஸ்தீனத்திற்கு ஆதரவு
இதற்கான சர்வதேச வாக்கெடுப்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும், எதிராக 9 நாடுகளும் வாக்கெடுப்பை 25 நாடுகள் புறக்கணித்தும் இருந்தன.
இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐ.நாவிற்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டான், ஐ.நாவின் அறிக்கை நகலை கிழித்தெறிந்தமையானது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |