தெற்கு லெபனானில் இஸ்ரேல் உக்கிர வான்வழித் தாக்குதல்:5 பேர் பலி
தெற்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தீவிர வான்வழித் தாக்குதல்களில், ஹிஸ்புல்லா அமைப்பின் பல போராளிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, அந்த அமைப்பின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ராணுவக் கட்டடங்கள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் உரிமை கோரியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் இராணுவம் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் 70க்கும் மேற்பட்ட தளங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
தாக்குதல்
இஸ்ரேலின் இந்த மிகச் சமீபத்திய தாக்குதல்களில் லெபனானில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், லெபனான் இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும் லெபனான் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படும் சூழலிலும், லெபனான் எல்லையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan