நாட்டிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவரது மனைவியும்..! தொழிலதிபரின் திருமணத்தில் கசிந்த தகவல்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரபல தொழிலதிபரின் மகனின் திருமணத்திற்கு மைத்திரிபால சிறிசேன அழைக்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் கவலையான தோற்றத்தில் இருந்துள்ளமை பலராலும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மைத்திரிபாலவை நன்கு அறிந்தவர்கள் திருமணத்தில் பாடலொன்றினை பாடுமாறு வற்புறுத்திய நிலையில், அவர் அங்கு தந்தை மகனை பற்றிய பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் மருமகளும்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் அவரது மனைவியும் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மைத்திரிபாலவின் பாடல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அவர் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனத்திடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பேசியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பிரபல அரசியல்வாதியின் மகனும் தொடர்பு
இருப்பினும், இந்த மோசடியில் பிரபல அரசியல்வாதியின் மகனும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்த நிலையில்,முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகன் தொடர்பில் பரவும் தகவல் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரம் போன்ற விடயங்களினால் மைத்திரிபால சிறிசேன பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.