காசாவை விட்டு அவசர அவசரமாக வெளியேறும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியப் படைவீரர்கள்! என்ன நடக்கின்றது இஸ்ரேலில்? (Video)
காசாவில் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் மெருமளவிலான தனது படை அணிகளை அங்கிருந்து மீளப்பெற இருப்பதாக அறிவித்துள்ளது இஸ்ரேல்.
காசாவை விட்டு இஸ்ரேல் இராணுவத்தின் ஐந்து பிரிகேட்டுக்கள் வெளியேற இருப்பதாக இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எதற்காக இந்தப் படைக்குறைப்பு அதிடியாக இஸ்ரேலினால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது சர்ச்சைக்குரிய கேள்வியாகவே தொடர்ந்தும் இருந்துகொண்டிருக்கின்றது.
இஸ்ரேல் இராணுவத்தைப் பொறுத்தவரை அதனது ஒரு பிரிகேட் என்பது சுமார் 2000 முதுல் 5000 வரையிலான படைவீர்களைக் கொண்ட ஒரு கட்டமைப்பு. அப்படியானால் கிட்டத்தட்ட 15ஆயிரம் இஸ்ரேலியப் படைவீரர்கள் காசா களமுனைகளை விட்டு வெளியேற இருக்கின்றார்கள் - அடுத்து வருகின்ற நாட்களில்.
காசா யுத்தம் முற்றுப்பெறாத நிலையில், காசாவில் ஹமாஸ் அமைப்பு தொடர்ந்தும் பலத்துடன் நின்றுகொண்டிருக்கின்ற சூழலில், எதற்காக இஸ்ரேல் பெரும் எண்ணிக்கையிலான படைக்குறைப்பை களமுனையில் மேற்கொள்ளுகின்றது?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுகின்றது இன்றைய 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |