இலங்கை பாதுகாப்பு தலைமையகத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் (Photos)
நான்காவது இலங்கை-பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடல் ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நடைபெற்றது.
குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தையானது இன்று (03.01.2024) இடம்பெற்றுள்ளது.
இதில் இலங்கை பிரதிநித்துவப்படுத்தி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமை தாங்கியதுடன், பாகிஸ்தான் பிரதிநித்துவப்படுத்தி அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஹமூத் உஸ் ஸமான் கான் தலைமை வகித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கான தீர்வு
கடந்த பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்து இரு தரப்பும் விரிவாக ஆராய்ந்ததுடன், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன் இருதரப்பு இராணுவ பயிற்சி பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு பயிற்சிகள் நிகழ்ச்சிகளை அதிகரிப்பது, கடல்சார் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல் மற்றும் இராணுவ தொழில்நுட்ப நிபுணத்துவ பரிமாற்றம் குறித்து இக்கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று, கலாச்சார மற்றும் இராஜதந்திர உறவுகளில் பின்னணியில் இந்த உரையாடல் மூலோபாய கூட்டாண்மையின் ஒரு மூலக் கல்லாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள், முப்படைத் தளபதிகள் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
காசாவை விட்டு அவசர அவசரமாக வெளியேறும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியப் படைவீரர்கள்! என்ன நடக்கின்றது இஸ்ரேலில்? (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |