மற்றொரு மத்தியகிழக்கு நாடு மீது இஸ்ரேல் கோர தாக்குதல்
சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதி மாளிகை பகுதியில் இராணுவ இலக்கொன்றை இஸ்ரேல் தாக்கியுள்ளது.
தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக சிரிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவின் ட்ரூஸ் சமூக உறுப்பினர்களைப் பாதுகாக்க முயற்சிப்பதாக இஸ்ரேல் கூறுகின்ற போதிலும், தாக்குதல்களுக்கு அரசியல் மற்றும் இராணுவ நோக்கமும் உள்ளது என கூறப்படுகின்றது.
இஸ்ரேல் தாக்குதல்
சுவைடா பகுதிக்கு செல்லும் வழியில் இருந்த கனரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் நிரப்பப்பட்ட பல கவச வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்கியுள்ளது.
அத்துடன், தெற்கு சிரியாவில் துப்பாக்கிச் சூடு சாவடிகள், ஆயுத சேமிப்பு வசதிகள் மற்றும் கூடுதல் சிரிய ஆட்சி இராணுவ இலக்குகளும் தாக்கப்பட்டுள்ளன.
⭕️The IDF struck the entrance of the Syrian regime's military headquarters in the area of Damascus in Syria.
— Israel Defense Forces (@IDF) July 16, 2025
The IDF continues to monitor developments and the regime's actions against Druze civilians in southern Syria. In accordance with directives from the political echelon,… pic.twitter.com/WSyBFrCiog
தெற்கு சிரியாவில் இராணுவ இலக்குகளைத் தொடர்ந்து தாக்க இஸ்ரேல் பாதுகாப்புப் படை தீர்மானித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 23 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
