200 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்துள்ள இஸ்ரேல்
பல தசாப்தங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 200 பாலஸ்தீனிய பணயக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தம், பலவீனமான நிலையடைந்துள்ளதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்தியில் தற்போது குறித்த ஒப்பந்தம் பலனளித்துள்ளதாக சர்வதேச தரப்புகள் விளக்கமளித்துள்ளன.
இந்நிலையில், நான்கு இஸ்ரேலிய பெண் வீரர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
பிரதிபலித்த மகிழ்ச்சி
காசாவில் 15 மாத சிறைவாசத்திலிருந்து நான்கு இளம் பெண்கள் வெளிவந்தபோது இஸ்ரேலில் பிரதிபலித்த மகிழ்ச்சி பாலஸ்தீனியர்களிடையேயும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் , இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |