ட்ரம்பின் திட்டத்தை அதிரடியாக நிராகரித்த நெதன்யாகு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்வைக்கப்பட்ட காசாவுக்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
படைகளை திரும்பப் பெறல்..
ஹமாஸ் அமைப்பு முழுமையாகத் தனது ஆயுதங்களைக் கீழே போட்டுப் பணியாத வரை காசா முனையிலிருந்து இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறப்பட மாட்டாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இந்த திட்டத்திற்குத் திருப்புமுனை எட்டப்பட்டுள்ளதாகவும், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களைக் கையளிக்கச் சம்மதித்துள்ளதாகவும் ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
எனினும், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்ட போதிலும், காசா பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்து - இருவர் பலி