மேற்கு கரை துப்பாக்கி சூடு! தொடரும் உயிரிழப்பு தீவிரமாகும் போர் - செய்திகளின் தொகுப்பு
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே தொடங்கிய போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் 110 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், 29 தொடக்கம் 31 வயதுடைய 3 பேர் இன்று அதிகாலை நேரத்தில் பாலஸ்தீனத்தின் ரமல்லா பகுதியின் வடமேற்கிலுள்ள பெய்ட் ரிமா, நப்லு பகுதியில் உள்ள அஸ்கர் அகதிகள் முகாம் மற்றும் வடக்கே உள்ள டுபாஸ் நகர் ஆகிய 3 இடங்களில் இஸ்ரேல் இராணுவ படையினரால் கொல்லப்பட்டனர்.
மேற்குறிப்பிட்ட மூன்று இடங்களிலும் ஹமாஸ் அமைப்பினரை தேடும் முயற்சியில் இஸ்ரேல் இராணுவம் ஈடுப்பட்டிருக்கும் போது மறைவிடங்களில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் இராணுவத்தினர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கியுள்ளனர்.
இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் மூவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் சுகாதார துறை அறிவித்திருக்கிறது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
