வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்...! காசாவில் 24 மணி நேரத்தில் 345 பேர் பலி
புதிய இணைப்பு
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 345 பேர் பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், காசாவில் உள்ள வைத்தியசாலை மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது.
வடக்கு காசாவில் உள்ள குறித்த அல்-குவாத் வைத்தியசாலையில் சுமார் 400 நோயாளிகளும் பொதுமக்கள் 12,000 ஆயிரம் பேரும் தஞ்சமடைந்து இருப்பதக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
இஸ்ரேலின் கோரத் தாக்குதலால், காசாவில் வாழும் 50,000 கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக ஐநா சபை தகவல் தெரிவித்துள்ளது.
காசாவின் மக்கள் தொகையில் பாதி குழந்தைகளாக உள்ளதால், ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு 1 குழந்தை பலியாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர் தாக்குதல்களால், காசாவில் வாழும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் என்று ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் தாக்குதல்
ஐநா சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, காசாவில் உள்ள 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றன.
காசாவில் சுமார் 50,000 கர்ப்பிணிகள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் அவதியுறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் அடுத்த ஒரு மாதத்தில் 5,500 பேருக்கு பிரசவம் நடக்கும் நிலையில் இருப்பதாக தெரிகிறது. பாதுகாப்பான குழந்தை பிறப்புக்கு கேள்விக்குறி எழுவதோடு, குழந்தை வளர்ப்பும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு
காசாவில் ஒட்டுமொத்தமாக 25 சதவீதமான வீடுகள் சிதைக்கப்பட்டுள்ளன. 59 மருத்துவமனைகள், 170 கல்வி நிலையங்கள், குடிநீர் மற்றும் சுகாதார நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதே உலக மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 22 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
