இஸ்ரேல் இராணுவம் கையாளும் உளவியல் யுத்தங்கள் (Video)
காசா மீதான யுத்த தாக்குதல்களை மேற்கொள்ளும்போது பல்வேறான இராஜதந்திர உளவியல் நகர்வுகளை கையாள்கிறது இஸ்ரேல் இராணுவம்.
Psychological Warfare என அழைக்கப்படும் இந்த திட்டமானது தற்போதைய இஸ்ரேல் - காசா யுத்தத்துக்கு முன்னதாகவே பாலஸ்தீன மக்கள் மீது செயற்படுத்த இஸ்ரேல் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹமாஸ் மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல்களில் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் உடனடியாக வெளியேறவேண்டும் என பொதுமக்களுக்கு உளவியல் ரீதியான அச்சத்தை தோற்றுவித்துள்ளது இஸ்ரேல்.
இவ்வாறு காசா எல்லையில் உள்ள பாலஸ்தீனத்தின் ஒலிபரப்புக்களை இடைமறித்த இஸ்ரேலிய இராணுவம் அவ்வப்போது தங்களின் எச்சரிக்கைகளை அந்த மக்கள் மத்தியில் ஒலிபரப்பவும் செய்துள்ளது.
இவ்வாறு பாலஸ்தீன மோதல் விடயத்தில் உளவியல் போர்முறையை கையாண்ட இஸ்ரேல், அதனை எவ்வாறு அந்நாட்டு மக்கள் மீது கொண்டு சென்றுள்ளது என்பதை விரிவாக ஆராய்கிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி...

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
