சீனாவுடன் தொடர்புகளைப் பேணிய விடுதலைப்புலிகள்! சீற்றமடைந்த சர்வதேசம்(Video)
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சீனா தொடர்புகளை பேணி வந்ததாகவும், இந்த விடயம் இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியதாகவும் பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் தி.திபாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் ‘‘ இந்தியாவிற்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான முறுகல் நிலை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், '' இந்து சமுத்திரத்தின் வலு சீர்குலைவை பயன்படுத்தியே சீனா இலங்கைக்குள் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆரம்பித்தது.
இந்த காலகட்டத்தில் இந்து சமுத்திரத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பினரும் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி வந்தனர்.
இதன் பின்னணியிலேயே, 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், ''தேர்தல் பகிஷ்கரிப்பு'' நடவடிக்கைக்கு பின்னால் இருந்து சீனா பெரும் பங்காற்றியதாக கூறப்படுகிறது'' என்றார்.
இவ்வாறு இலங்கை அரசியலில் சீனா இரட்டை நிலைப்பாட்டை எவ்வாறு கையாண்டது என்பதையும், இதனால் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
