உச்சகட்ட பதற்ற நிலையில் யுத்தகளம்.....! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்: ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் உக்கிரமாக நடைபெற்று வரும் நிலையில், காசாவின் நடைபெற்றும் போருக்கு ஈரான் பதிலடி கொடுக்க தயாராகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இஸ்ரேலுக்கு எதிராக தடைகளை விதிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவில் இடம்பெற்றுவரும் அரபு நாட்டு தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மீது தடை
ஈரான் ஜனாதிபதி தொடர்ந்து தெரிவிக்கையில், காசாவில் இடம்பெற்றுவரும் போருக்கு நடடிக்கை எடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இஸ்ரேல் மீது இஸ்லாமிய நாடுகள் எண்ணெய் மற்றும் பொருட்கள் மீதான தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மோதல்கள் தொடர்பில் வார்த்தைகளால் பதில் கூறாமல் நடவடிக்கைகளால் பதிலளிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் காசாவில் இடம்பெற்று வரும் போருக்கு நடடிக்கை எடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அரபு நாட்டு தலைவர்களின் மாநாட்டில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான "போர் குற்றங்களுக்கு" இஸ்ரேல் பொறுப்பு என்றும் காசாவில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam