தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் : 24ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
இஸ்ரேலில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் 100-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது.
இந்த போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் காசா மருத்துவமனைகளுக்கு தாக்குதலில் பலியான 132 பேரில் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போரில் ஏறத்தாழ 8000 ஹமாஸ் போராளிகள் மற்றும் 24,100 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 60,834 பேர் காயமுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பணய கைதிகள் ஒப்படைக்கப்பட வேண்டும்
மேலும் இந்த போர் நிறுத்தம் தொடர்பில் இஸ்ரேலின் பொருளாதார மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர் பர்கட் கருத்து தெரிவிக்கையில்,
எங்கள் நாட்டில் அனைவரின் குறிக்கோளும் போரை வென்று, பணய கைதிகளை மீட்க வேண்டும் என்பதே ஆகும். எந்த நிபந்தனையும் இன்றி அவர்கள் சரணடைய வேண்டும்.
எங்கள் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகள் அனைவரும் ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் உடன்பட்டு ஹமாஸ் அமைப்பினர் தான் வெள்ளை கொடி காட்ட வேண்டும்.
இல்லையென்றால் போர் தொடரும். இதை தவிர வேறு எந்த மாற்று வழியும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் சரியான திசையில் இருக்கும் சரியான இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
