யேமனிலிருந்து இஸ்ரேலை நோக்கிய ஏவுகணைகள்: இலக்குவைக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தளங்கள்
ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளங்களை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
“அய்ன் அல்அசா விமானப்படை தளத்திற்குள் பாரியவெடிப்பு சத்தங்கள் கேட்டன. ஈராக்கிய படையினர் அந்த விமானதளத்தை மூடி சோதனைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த விபரங்களும் வெளியாகவில்லை” என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானதாக்குதல்
கடந்த வாரம் ஈரானிற்கு நெருக்கமான ஈராக்கிய குழுக்கள் ஹமாஸ் விவகாரத்தில் அமெரிக்கா - இஸ்ரேலிற்கு ஆதரவளிப்பதற்காக அமெரிக்காவின் நிலைகளை தாக்கப்போவதாக எச்சரித்திருந்தன.
இந்நிலையில், ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க படையினர் அதிகளவு ஆளில்லா விமானதாக்குதலிற்கு உள்ளாகின்றனர் என தெரிவித்துள்ள பென்டகன் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.
A US Navy warship intercepted three cruise missiles and several drones launched by the Iran-aligned Houthi movement from Yemen potentially toward Israel, Pentagon spokesman Brigadier General Patrick Ryder said https://t.co/3kcYzf9OAR pic.twitter.com/ZYwbIBnVgG
— Reuters (@Reuters) October 19, 2023
ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் இந்த தாக்குதல்களை மேற்கொள்கின்றன என பென்டகன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இஸ்ரேலை நோக்கி யேமனில் உள்ள ஹெளத்திபோராளிகள் ஏவிய குரூஸ் ஏவுகணையை அமெரிக்க யுத்தகப்பல் சுட்டுவீழ்த்தியுள்ளது என பெனடகன் தெரிவித்துள்ளது.