காசாவிற்கான உதவிகள் தயார்: ஆனால் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதில் சிக்கல்

Joe Biden Israel Israel-Hamas War
By Mayuri Oct 20, 2023 06:31 AM GMT
Report

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நிலையில், காசா பகுதியில் சிக்கியுள்ளவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

அங்கு உதவிகளும் மீட்பு பணியாளர்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எகிப்தை அண்மித்துள்ள ரஃபா கடவை மூலம் உதவிப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் செல்வதற்கான இணக்கத்தை எகிப்திடமிருந்து பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம் - வடக்கின் தற்போதைய நிலவரம் (Video)

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம் - வடக்கின் தற்போதைய நிலவரம் (Video)

எல்லைக்கடவையில் உதவி வாகனத் தொடரணி

தனது டெல் அவிவ் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் போது விமானத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பைடன் இதைக் கூறியுள்ளார். ஆனால், அந்த உதவி வாகனத் தொடரணி அந்த எல்லைக்கடவையின் எகிப்திய பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காசாவிற்கான உதவிகள் தயார்: ஆனால் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதில் சிக்கல் | Gaza Aid Ready Trouble Getting It Safe

எகிப்திய ஜனாதிபதி அப்தல் ஃபதா அல் சிசி உதவி வாகனங்கள் செல்லும் வகையில் அந்த கடவையை திறக்க சம்மதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ள நிலையில், காசாப் பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்துவதால் அந்தப் பகுதிக்குள் செல்ல முடியவில்லை என எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளர்.

அவ்வகையில் உதவிகள் காசாப் பகுதிக்குள் செல்ல முடியாத நிலை காரணமாக காயமடைந்துள்ள ஆயிரக்கணக்கானவர்களுக்கு உதவிகள் கிடைக்காமல் போகும் பேராபத்து நிலவுவதாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலப்பரப்பில் இடம்பெறும் வன்முறைகள் பல ஆண்டுகளில் தாங்கள் கண்டிறாத ஒன்று என, அந்த சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சீன வழங்கியுள்ள வாக்குறுதி: அரசியல் விவகாரங்கள் குறித்து விசேட கவனம்

இலங்கைக்கு சீன வழங்கியுள்ள வாக்குறுதி: அரசியல் விவகாரங்கள் குறித்து விசேட கவனம்

உதவி பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை

காசாவிலுள்ள பொதுமக்களின் தேவைக்காக, அவசர வைத்திய உதவிப் பொருட்கள் ஐ சி ஆர் சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு அவை 60 வாகனங்களில் தயாராக இருந்தாலும், அவற்றை அவசரமாகத் தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியவில்லை என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

காசாவிற்கான உதவிகள் தயார்: ஆனால் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதில் சிக்கல் | Gaza Aid Ready Trouble Getting It Safe

வைத்திய உதவிப் பொருட்களுக்கு அப்பாற்பட்டு, நான்கு சத்திரசிகிச்சை வைத்தியர்களும் தயார் நிலையில் இருப்பதாக ஐ சி ஆர் சி கூறுகிறது.

அதில் தலைமை சத்திரசிகிச்சை வைத்தியர், எலும்பியல் வைத்தியர், மயக்கவியல் வைத்தியர ஆகியோருடன் செவிலியர் ஒருவரும் மிகவும் நெருக்கடியான நிலையிலுள்ள காசாப் பகுதி வைத்தியசாலைக்கு உதவ தயார் நிலையில் உள்ளனர்.

திருகோணமலையில் புத்தர் சிலைகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியவர் கைது (photos)

திருகோணமலையில் புத்தர் சிலைகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியவர் கைது (photos)

அங்கு நாளாந்தம் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மருந்துகள், உதவிப் பணியாளர்கள் மற்று வைத்தியர்கள் உள்ளே செல்வதற்கான பாதுகாப்பான வழி இன்னும் திறக்கபப்டவில்லை.

அங்கு நிலைமை மிகவும் நெருக்கடியாகவும் அதேவேளை ஆட்களை அனுப்புவது மிகவும் சவால் நிறைந்ததாகவும் காணப்படுவதாக, ஐ சி ஆர் சியின் தலைமை வைத்தியர் டொம் பொடோக்கர் தெரிவித்துள்ளார்.

காசாவிற்கான உதவிகள் தயார்: ஆனால் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதில் சிக்கல் | Gaza Aid Ready Trouble Getting It Safe

மோசமாக உள்ள நிலைமை

அத்துடன் “அங்கு ஆட்களை அனுப்பு உதவுவது மிகவும் முக்கியமானது. அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அங்கு ஏராளமனவர்கள் காயமடைந்துள்ளனர், ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அப்படி துன்புறுபவர்களுக்கு உதவ வேண்டிய ஒரு கடமை ஐ சி ஆர் சிக்கு உள்ளது. இம்முறை அங்கு சூழல் மிகவும் கடினமாக உள்ளது. காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அங்கு அரங்கேறும் மனிதாபிமான அவலம் என்பது மிகப்பெரும் அளவிலானது” என குறிப்பிட்டுள்ளார். 

தொடரும் காட்டு யானையின் அட்டகாசம்: பொதுமக்கள் விசனம்

தொடரும் காட்டு யானையின் அட்டகாசம்: பொதுமக்கள் விசனம்

இரண்டு வாரமாக நடைபெற்றுவரும் இந்த கொடூரமான மோதல்களில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கனவர்கள் உயிரிழந்துள்ளனர். அது மாத்திரமின்றி இஸ்ரேலை ஆளும் பெஞ்சமின் நெத்தன்யாஹூ அரசாங்கம் காசா நிலப்பரப்பு மீது பொருளாதரத் தடைகளையும் விதித்துள்ளது.

இந்த மோதலில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தோ, காணாமலோ அல்லது இடம்பெயர்ந்தோ உள்ளனர்.

இந்த மோதல் கட்டுக்கடங்காமல் போகக்கூடும் எனவும் இரு தரப்பிலும் பொதுமக்களின் துன்பங்களும் துயரங்களும் மேலும் அதிகரிக்கலாம் எனவும் ஐ சி ஆர் சி எதிர்வு கூறியுள்ளது. காசாவில் வைத்தியசாலைகள் செயலிழந்து போகும் நிலையில் உள்ளன.

காசாவிற்கான உதவிகள் தயார்: ஆனால் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதில் சிக்கல் | Gaza Aid Ready Trouble Getting It Safe

அங்கு மின் விநியோகம் இல்லை, மக்களுக்கு சிறிதளவே உணவும் குடிநீரும் உள்ளது. நடைபெற்றும் வரும் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான அவலத்தை எதிர்த்து சமாளிக்க தொடர்ச்சியாக நிலைத்திருக்கக் கூடிய மனிதநேய உதவிகள் தேவை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US