காசா நகரத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டம்! எச்சரிக்கும் சஜித்
காசா நகரத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டம், மோதலுக்கு இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான நம்பிக்கையை அழிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
"இஸ்ரேல் காசாவை கைப்பற்றினால், அது வெறும் நிலத்தைப் பற்றியது மட்டுமல்ல, "இரு நாடுகள்" தீர்வுக்கான நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நம்பிக்கையையும் அது உடைத்துவிடும்.
இஸ்ரேலின் திட்டம்
இந்தக் கொள்கையில் ஒரு காலத்தில் ஒற்றுமையாக இருந்த நாடுகள் பிரிந்து செல்லத் தொடங்கும்.
If Israel takes Gaza, it’s not just about land it will break the trust that has kept hope for a two-state solution alive. Countries that stood together on this principle will drift apart. And when that trust is gone, peace will become almost impossible. https://t.co/npeRC0y3jv
— Sajith Premadasa (@sajithpremadasa) August 9, 2025
அந்த நம்பிக்கை உடைந்தவுடன், அமைதி கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடும்,” என்று சஜித் பிரேமதாச X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை காசாவை கைப்பற்றும் நோக்கத்தை அறிவித்ததைத் தொடர்ந்து அவர் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.




