உயிருடன் இருப்பதாக நம்பப்படும் 20 பணயக்கைதிகள்! விடுவிக்கவுள்ள ஹமாஸ்
உயிருடன் இருப்பதாக நம்பப்படும் 20 பணயக்கைதிகளையும், இன்று(13) காலை ஹமாஸ் விடுவிக்கும் என்று இஸ்ரேல் எதிர்பார்க்கிறது.
அத்துடன், இறந்த பணயக்கைதிகளின் உடல்கள் சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டு, அடையாளம் காண தடயவியல் நிறுவனத்திற்கு கொண்டு வரப்படும் என்று இஸ்ரேலிய அரசாங்க பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம்
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், ஹமாஸ் நாளை உள்ளூர் நேரப்படி 12:00 மணிக்குள் அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்ப வேண்டும் பரிமாற்றமாக, இஸ்ரேல், சிறுவர்கள் உட்பட 250 பலஸ்தீன கைதிகளையும், 1,700 கைதிகளையும் விடுவிக்கவுள்ளது.
இதற்கிடையில் உதவி பாரவூர்திகள் காசாவிற்குள் நுழைவதைக் காண முடிந்ததாக செய்திகள் கூறுகின்றன.
அதேநேரம் டொனால்ட் ட்ரம்ப் திங்கட்கிழமை எகிப்தில் நடைபெறும் காசா தொடர்பான அமைதி உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார்.





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
