இஸ்ரேல் தேர்தல் - தமது நாட்டின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது கட்டார்
இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, அரபு அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கி வாக்குப்பதிவில் தலையிட்டதாக கட்டார் மீது இஸ்ரேலின் சில அரசியல்வாதிகள் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை கட்டாரின் வெளியுறவு அமைச்சக பேச்சாளர் செய்திமஜேத் அல்-அன்சாரி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இஸ்ரேலின் உள்நாட்டு அரசியல் தோல்விகளுக்கு கட்டாரை பலிகடா ஆக்க முயற்சிக்கிறார்கள் என்றும், இது முற்றிலும் அடிப்படையற்ற மற்றும் அபாயகரமான பிரசாரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பணிகளை பாதிக்காது என வலியுறுத்தல்
இத்தகைய அவதூறுகள், பிராந்திய அமைதி மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கட்டார் மேற்கொண்டு வரும் ராஜதந்திர மற்றும் மனிதநேய உதவிகள், மற்றும் மத்தியஸ்தர் பணிகளைப் பாதிக்காது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், இஸ்ரேலின் மத்திய தேர்தல் ஆணைக்குழுவின் தற்காலிக இயக்குநர், தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், தேர்தல் சட்டப்பூர்வமாகவே நடைபெற்றது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலின் பொதுத் தேர்தல் முடிவுகள்படி, பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தனது போட்டியாளரான முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட்டை விட மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதைக் காட்டுகின்றன, ஆனாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளார்.
ஆளும் கூட்டணியை அமைக்க முயற்சி
தேர்தலின் 99% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 120 இடங்களைக் கொண்ட நெசெட்டில், நெதன்யாகுவின் லிகுட் கட்சியும் அதன் தீவிர வலதுசாரி மற்றும் அதி-பழமைவாத யூதக் கூட்டணிக் கட்சிகளும் 53 இடங்களை வெல்லும் நிலையில் உள்ளன.
ஐசன்கோட்டின் யஷார் கட்சியும், அவரது கூட்டணியில் உள்ள மற்ற மூன்று யூத எதிர்க்கட்சிகளும் 48 இடங்களைப் பெறும் நிலையில் இருந்தன. இந்த நிலையில் இரண்டு தலைவர்களும் ஒரு ஆளும் கூட்டணியை அமைக்க முயற்சிப்பதாகக் கூறியுள்ளனர்.
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
போருக்காக வேலை செய்ய முடியாது... 22 நாடுகளில் போராட்டத்தில் குதித்த துறைமுகத் தொழிலாளர்கள் News Lankasri