இஸ்ரேலில் போர் தொடக்கத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் பொதுத் தேர்தல்
இஸ்ரேலின் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு (கென்னசட் - Knesset) தேர்தல் நடைபெற்று வருகிறது.
2023 ஒக்டோபர் போர் தொடக்கத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இதுவாகும்.மாலை 4 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 55.7% ஆக உயர்ந்துள்ளது.
நெதன்யாகுவின் ஆட்சி
2022 தேர்தலை விட இது 8% அதிகமாகும் பிரதமரின் லிக்குட் (Likud) கட்சி தலைமையிலான தீவிர வலதுசாரி கூட்டணிக்கும், முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசென்காட் (Gadi Eisenkot) தலைமையிலான 'யஷார்' (Yashar) கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தல் முடிவுகளைச் சவாலுக்கு உட்படுத்துவதற்கும் சந்தேகங்களை எழுப்புவதற்கும் நெதன்யாகு அடித்தளம் அமைத்து வருவதாக எதிர்க்கட்சியான 'யஷார்' குற்றம் சாட்டியுள்ளது.
இடதுசாரி 'தி டெமோக்ராட்ஸ்' கட்சியின் ஆதரவாளர்கள் மீது ஹோலோன் (Holon) பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற பாலஸ்தீனியர்களில் பெரும்பாலானோர் நெதன்யாகுவின் ஆட்சியை வீழ்த்தும் நோக்கில் வாக்களித்து வருகின்றனர்.