வடக்கு கிழக்கு குடியேற்றங்களுக்கு பின்னால் இஸ்ரேல் : வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையின் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் இனப்பரம்பலை மாற்றும் குடியேற்றங்கள்,
இஸ்ரேலின் யோசனையில் மேற்கொள்ளப்படுபவை என்று சிங்கள பத்தி எழுத்தாளரும்,பேராசிரியருமான புன்சரா அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பலஸ்தீனத்தில் மேற்கொண்ட குடியேற்றத்திட்டங்களை மையப்படுத்தியதாக இவை அமைந்துள்ளன என்பது அவரின் ஆய்வாக அமைந்துள்ளது.
இஸ்ரேலிய செல்வாக்கு
20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இதற்கு பின்னால் உள்ள இஸ்ரேலிய செல்வாக்கு இருப்பதாக அவர் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இது நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் குடியேறியவர்களின் கொள்கையின் பின்னால் இஸ்ரேலின் நிழல்கள் என்ற தலைப்பிலான அவரது நூலில் இந்த விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இலங்கையில் மீள்குடியேற்ற இலக்குகள் Amy Yar என்ற இஸ்ரேலிய முகவரால் உருவாக்கப்பட்டன. ஜே ஆர். ஜெயவர்த்தனவின் நிர்வாகத்துடன், இஸ்ரேலின் உறவுகளின் அடிப்படையில்,இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாகவும் பேராசிரியர் புன்சராவின் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |