கடும் சீற்றத்தில் கட்டார்.. தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு
கட்டாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களையும் சீற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கட்டாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தோஹா மீதான இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டித்ததாக ஹமத் அல் தானி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "கட்டார் அரசு இந்த பொறுப்பற்ற, குற்றவியல் தாக்குதலைக் கண்டித்து கடுமையாகக் கண்டிக்கிறது,
அத்து மீறல்
இது கட்டாரின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பின் அப்பட்டமான அத்து மீறலாகவும், சர்வதேச சட்டத்தின் விதிகள் மற்றும் கொள்கைகளை தெளிவாக மீறுவதாகவும் உள்ளது.
இந்த தாக்குதல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகின்றது. போரை தணித்து நிலையான இராஜதந்திர தீர்வுகளை அடைவதற்கான முயற்சிகளையும் தடுக்கின்றது.
கட்டார் அதன் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் அதன் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும்” என ஹமத் அல் தானி அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
