சர்வதேச Black List பட்டியலுக்கு நகர்த்தப்படும் இஸ்ரேல் இராணுவம்
காசாவில் நடத்திய பாரிய தாக்குதல்களின் முடிவில் 14 ஆயிரம் குழந்தைகளின் மரணத்திற்கு இஸ்ரேல் காரணமாகியுள்ளதாக சர்வதேச தரப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதன் காரணமாக இஸ்ரேலை, அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள பட்டியலில் சேர்க்க ஐ.நா நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்றும் 75 சதவீதமானவர்கள் குழந்தைகள் எனவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
JUST IN: ?? ?? United Nations officially adds Israel to its blacklist of countries that k*ll children, joining groups such as ISIS, Al-Qaeda, Boko Haram and others. pic.twitter.com/7Imo5xowTa
— BRICS News (@BRICSinfo) June 7, 2024
தொடர் வன்முறை
இந்நிலையில் காசாவை இலக்கு வைத்துள்ள இஸ்ரேலின் தாக்குதல்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன. பல்வேறு பொது அமைப்புகளினதும், உலக நாடுகளிடமிருந்தும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இஸ்ரேல் தரப்பானது அதனை நிராகரித்து வருகிறது.
இதன் காரணமாக இஸ்ரேலின் பெயரை ஐஎஸ்ஐஎஸ், அல் கொய்தா வரிசையில் சேர்க்க ஐநா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருபவர்களை block list பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு வருடமும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை இஸ்ரேல் இராணுவத்திற்கு அவர் அனுப்பியுள்ளதாகவும், ஐ.நா மனித உரிமைகள் நாளில் இந்த பட்டியலில் இஸ்ரேலை உள்ளடக்குவது நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு திட்டம் நடைமுறைக்கு வந்தால் உலக நாடுகள் இஸ்ரேல் மீது ஆயுத தடையை விதிக்கக்கூடும். மேலும் இஸ்ரேலுக்கு மட்டுமல்லாது அமெரிக்காவுக்கும் சவாலை ஏற்படுத்தக்கூடும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |