உக்ரைன் ஜனாதிபதியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) இன்று முதல் முறையாக உக்ரைன் ஜனாதிபதியிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா ஏற்கனவே உக்ரைனுக்காக அனுமதித்த இராணுவ உதவி இன்னும் உக்ரைனுக்கு அனுப்பப்படாமை தொடர்பிலேயே பைடன், செலென்ஸ்கியிடம் மன்னிப்பைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை, பைடன் பாரிஸில் சந்தித்தபோதே மன்னிப்பை கோரியதாக கூறப்படுகிறது.
இராணுவ உதவிப் பொதி
உக்ரைனுக்கான 61 பில்லியன் டொலர் இராணுவ உதவிப் பொதியை காங்கிரஸில் பழமைவாத குடியரசுக் கட்சியினர் ஆறு மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இதற்காக தாம் மன்னிப்பை கோருவதாக பைடன் கூறியுள்ளார். இருப்பினும், அமெரிக்க மக்கள் தொடர்ந்தும் உக்ரைனுக்கு ஆதரவாகவே செயற்படுகிறார்கள் எனவும் நாங்கள் தொடர்ந்தும் முழுமையாக உங்களுடன் இருக்கிறோம் என்றும் பைடன் செலென்ஸ்கியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri