அமெரிக்காவின் சிறப்பு தூதர் முன்கொணர்ந்த ஒப்பந்தம்: ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் சிறப்பு தூதர் விட்காப் முன்கொணர்ந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழியாகவும், தரைவழியாகவும் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ட்ரம்ப்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர்
இந்தநிலையில், சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் முயற்சியால் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
எனினும், ஒப்பந்தப்படி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி, மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது.
இந்தநிலையில், இந்த போரில் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இதனையே தாம் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
