இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்.. 7 உயர் கொமாண்டோக்களை இழந்த ஈரான்
ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட பதில் தாக்குதலில் ஈரானிய விண்வெளிப் படையின் ஏழு உயர் தளபதிகள் கொல்லப்பட்டதை ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் இக்கொடூர தாக்கதலில் ஈரானிய விண்வெளிப் படையின் தலைவர் அமீர் அலி ஹாஜிசாதே உயிரிழந்துள்ளார்.
IRGCஇன் விண்வெளிப் படை
அதேவேளை, பிரிகேடியர் ஜெனரல் அமீர் ஹாஜிசாதே உட்பட எங்கள் ஏழு தளபதிகளின் மரணத்திற்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம் என்று ஈரானிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட இஸ்ரேலின் இந்த தாக்குதலில் குறித்த முக்கிய அதிகாரிகள் பலியானதை ஈரான் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, நேற்றைய தினம் ஈரானிய புரட்சிகர காவல்படையின் விண்வெளிப் படைக்கான புதிய தலைவராக சையித் மஜித் மௌசவி நியமிக்கப்பட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri