இஸ்ரேலின் கொலைவெறி தாக்குதல்.. பதுங்கு குழியில் தஞ்சமடைந்த அலி கமேனி!
இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரானின் உயர்மட்ட தலைவர் அலி கமேனி வடகிழக்கு தெஹ்ரானில் உள்ள ஒரு நிலத்தடி பதுங்கு குழிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதி வாய்ப்பு
ஈரானின் லாவிசான் என்ற பகுதியில் உள்ள ஒரு நிலத்தடி பதுங்கு குழியில் கமேனி தனது குடும்பத்தினருடன் இருப்பதாக ஈரானிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, கமெனியின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை முற்றிலுமாக கைவிடுவதற்கான இறுதி வாய்ப்பை இஸ்ரேல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடவடிக்கையின் அவரைப் படுகொலை செய்யவில்லை என்று மத்திய கிழக்கில் உள்ள ஒரு இராஜதந்திர ஆதாரத்தை மேற்கோள் காட்டி செய்தி ஊடகம் ஒன்று மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அதேவேளை முன்னதாக கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஒக்டோபரில் ஈரான் - இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கியபோது அவர் பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
