தீப்பற்றி எரியும் ஈரான் தலைநகர்: கண்களுக்குத் தெரியாமல் ஒரு புதிய வியூகம்
கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் பல ஏவுகணைகள் இஸ்ரேலின் முக்கிய நகரங்களில விழுந்து வெடித்து பலத்த சேதத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ‘ஈரான் தலைநகர் தெஹ்ரான் பற்றியெரியப்போகின்றது’ என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார்.
அவரது எச்சரிக்கை வெளியாகிச் சிலமணி நேரங்களில் தெஹ்ரான் பற்றியெரிகின்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
அதேபோன்று, ஈரானின் சில ஏவுகணைச் செலுத்திகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் குண்டுகளை வீசி அவற்றை அழிக்கின்ற காட்சிகளையும் இஸ்ரேலிய வான்படை வெளியிட்டிருந்தது.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேலிய விமானங்கள் சுதந்திரமாக நடமாடித் திரிவதாகவும், டெகரானின் வான்பரப்பைத் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும், இஸ்ரேல் படைத்துறை நேற்றைய தினம்(14) அறிவித்திருந்தது.
இந்தப் பின்னணியில ஈரானைச் சுற்றி வகுக்கப்பட்டுவருகின்ற ஒரு முக்கியமான வியூகம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி...
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam