அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியிலான தொழிற்சங்க நடவடிக்கை! (VIDEO)
நுவரெலியா
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (21) நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற சென்ற நோயாளிகள் கடும் சிரமங்களுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.
தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பலர் வைத்தியர்களின் வேலை நிறுத்தம் பற்றி அறியாததால் வைத்தியசாலைக்கும் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளிலும் மருத்துவ சிகிச்சையை நாடியுள்ளனர்.
வேலை நிறுத்தம் காரணமாக சிகிச்சை பெறாமல் வீடு திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் இன்று (21) நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் இடமாற்றச் சபையின் அனுமதியின்றி சுகாதார அமைச்சின் தன்னிச்சையான முடிவின் கீழ் மருத்துவப் பணிகளுக்கு புதிதாக மருத்துவர்களை பிழையான விதத்தில் நியமித்தமைக்கு எதிராக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)குறித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையிலும் அதற்கு ஆதரவு வழங்கப்பட்டதுடன், அவசர சிகிச்சைபிரிவு, மற்றும் ஏனைய அத்தியவசிய மருத்துவ சேவைகள் அனைத்தும் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடுமையான சுகவீனத்திற்காக சிகிச்சைக்காக வருகை தந்தவர்களிற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன் ஏனைய நோயாளர்கள் சிகிச்சையினை பெற்றுக்கொள்ளாமல் திரும்பி சென்றிருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.










வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
