தத்தளிக்கும் இலங்கை! 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய தீவு
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் சூழ்நிலையில், கல்பிட்டி தீவுக்கூட்டத்தில் உள்ள 14 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட உச்சமுனி தீவு வெளிநாடு ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீவு 417 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சுவிஸர்லாந்து நாட்டின் நிறுவனம் ஒன்றுக்கு 30 ஆண்டு கால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது சம்பந்தமான உடன்படிக்கை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சில் கையெழுத்திடப்பட்டதாகவும் அகில இலங்கை சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சுக்கு சொந்தமான இந்த தீவை குத்தகைக்கு விடுவது தொடர்பில் 2000 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது எப்படி என சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
எதனை நிர்மாணிப்பதற்காக இந்த தீவு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவில்லை. பல்லுயிர்களை கொண்டுள்ள இந்த தீவில் நிர்மாணிப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர் பெற வேண்டிய சுற்றுச் சூழல் சம்பந்தமான அறிக்கையும் பெறப்படவில்லை என சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இல்லாத சந்தரத்ப்பத்தில் எவரது தேவைக்காக இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அகில இலங்கை சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் கூறியுள்ளது.

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri