புதிய கொத்தணியை உருவாக்கிறதா சுகாதார திணைக்களம்? -பொதுமக்கள் விசனம்
வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்று வருகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களிற்கான இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டால் புதிய கோவிட் கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் அண்மையில் 81000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுக் கடந்த மூன்று நாட்களாக இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக இன்றையதினம் வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் வவுனியா வடக்கு, தெற்கு வலயத்தினை சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களிற்கான இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாடு காலை 09 மணி முதல் இடம்பெறும் என்று வலயக்கல்வி பணிமனையினால் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்றையதினம் வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரிக்கு அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் காலை 07.30 மணி தொடக்கம் வந்த வண்ணம் இருந்தனர்.
ஆயினும் 2வது தடுப்பூசி போடுவதற்கான செயற்பாடு காலை 10 மணி வரை சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்படாமையால் பாடசாலை முன்பாக 350க்கும் மேற்பட்டவர்கள் குழும வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இச்செயற்பாடு குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படாமையினால் பல கர்ப்பிணி தாய்மார்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியதுடன் மீண்டும் வீட்டிற்குத் திரும்பிச்செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
வவுனியாவில் அண்மைக்காலமாக கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றதுடன் கடந்த வாரம் வவுனியா மாவட்டத்தில் 45 பேர் வரையான கோவிட் மரணங்களும் இடம்பெற்ற நிலையில் பிராந்திய சுகாதார பணிமனையின் சரியான ஒழுங்குபடுத்தல் இன்மையே இதற்குக் காரணம் என அதிபர், ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக வவுனியா பிராந்திய சுகாதார பணிப்பாளர் மகேந்திரனிடம் கேட்ட போது, அவர் இந்த விடயம் தொடர்பாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியிடம் பேசுவதாக தெரிவித்துள்ளார்.



1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 16 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri