கொழும்பில் பேருந்துகளுக்கு தீ வைத்தமையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
கொழும்பில் ஏற்பட்ட வன்முறையின் போது பேருந்துகளுக்கு தீ வைத்தவர்களை உடனடியாக கைது செய்யுமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தீயினால் எரிந்து நாசமான பேருந்துகளுக்கு நட்டஈடு வழங்க முடியாததால், பேருந்துகளை அழித்த நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அவர்களிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பேருந்துகளுக்கு காப்புறுதி செய்யப்பட்டிருந்தாலும் சேதத்தின் பின்னர் முழுமையான இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புனரமைக்கப்பட்ட சில பேருந்துகளில் அரசாங்கம் தலையிட உத்தேசித்துள்ளதாகவும் இல்லையேல் எரிக்கப்பட்ட பேருந்து உரிமையாளர்களின் குடும்பங்களின் உயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது எனவும் கெமுனு விஜேரத்ன வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 19 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
