இன்று இரவிலிருந்து எரிபொருள் விலை உயர்கிறதா?
இன்று இரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிக்கும் என வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் இதுதொடர்பான பதிவொன்றை அவர் இட்டுள்ளார்.
லங்கா ஐஓசி நிறுவனம் கடந்த ஆறாம் திகதி டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 3 ரூபாவினாலும் LP 92 LP லீற்றர் ஒன்றின் விலையை 7 ரூபாவினாலும் உயர்த்தியிருந்தது.
There is no truth in the rumor of fuel price increase tonight.
— Udaya Gammanpila (@UPGammanpila) February 17, 2022
අද රාත්රියේ ඉන්ධන මිල වැඩි කරන බවට පැතිරෙන කටකතාවන්හි සත්යතාවයක් නැත.
அதனைத் தொடர்ந்து எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்ததுடன், எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியும் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.