யாழ். வர்த்தகர்களின் பொறுப்பற்ற செயல்; தேங்கிய வெள்ள நீர்
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தினை சூழவுள்ள வர்த்தகர்களின் பொறுப்பற்ற செயலால் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதியில் வெள்ளம் வழிந்தோட முடியாமல் தேங்கி காணப்பட்டடுள்ளது.
இந்நிலையில் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் (V.Manivannan) துரித முயற்சியினால் குறித்த வாய்க்கால் பகுதி துப்பரவு செய்யப்பட்டு, அதில் தேங்கிய வெள்ள நீர் வழிந்தோட கூடிய வழி அமைக்கப்பட்டது.
குறித்த வியாபாரிகளுக்கு எத்தனையோ தடவைகள் அறிவிக்கப்பட்டதோடும், எத்தனையோ தடவை குறித்த அடைப்புகள் ஏற்படும் போது வடிகால் துப்பரவும் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இன்றும் இவ்வாறு சுத்தம் செய்யப்படுகின்ற போதிலும் அப்பகுதி வர்த்தகர்களின் பொறுப்பற்ற செயல் தொடருமானால் மீண்டும் அப்பகுதியில் வெள்ளநீர் தேங்கும் நிலை ஏற்ப்படும் என சுட்டிகாட்டப்படுகிறது.





விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri

தேசிய விருது வாங்கிய ஜி.வி. பிரகாஷிற்கு, ஏ.ஆர். ரகுமான் கொடுத்த விலையுயர்ந்த பரிசு... போட்டோ இதோ Cineulagam
